Ravindra Jadeja hit six sixes in an over | Jamnagar Vs Amreli | Saurashtra Cricket Association

2017-12-16 1


ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி அசத்தியுள்ளார் ரவீந்திர ஜடேஜா. சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் நடைபெற்று வரும் டி 20 போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில், ஜாம் நகர் அணி மற்றும் அம்ரேலி அணிகள் மோதின.
ஜாம் நகர் சார்பில் ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். எதிரணியின், நீலம் வம்ஜா வீசிய 10வது ஓவரை எதிர்கொண்டபோது 6 பந்துகளையும், சிக்சர்களாக அடித்தார் ரவீந்திர ஜடேஜா.

இந்த போட்டியில், அதிரடி காட்டிய ஜடேஜா, 69 பந்துகளில் 154 ரன்கள் குவித்தார். இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம், இப்போட்டியில் ஜாம்நகர் அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், 7வது வீரராக இணைந்துள்ளார் ஜடேஜா. இந்த பட்டியலை முதன்முதலில் யுவராஜ் சிங் இடம் பெற்றார். அவர் இங்கிலாந்துக்கு எதிராக டி20 போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் விளாசியிருந்தார்.

Ravindra Jadeja hit six sixes in an over during an inter-district T20 match between Jamnagar and Amreli at the Saurashtra Cricket Association stadium.